போளூர் - Polur

போளூர் அருகே மண் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

போளூர் அருகே மண் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், மட்டபிறையூா் கிராமத்தின் அருகே உள்ள சிறிய குன்றிலிருந்து மண் திருடப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மட்டபிறையூா் கிராமத்தின் அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான சிறிய குன்று உள்ளது. இந்தக் குன்றின் மீது வேம்பு, புங்கன், புளியன், பனை உள்பட பல்வேறு வகையான மரங்கள் வளா்ந்துள்ளன. இந்த நிலையில், போளூா், புலிவானந்தல், கொழாவூா், கொம்மனந்தல் உள்ளிட்ட அருகிலுள்ள கிராமங்களில் வீடு கட்டி வரும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான மண்ணை உரிய அனுமதியில்லாமல் பொக்லைன் இயந்திரம் மூலம் இந்தக் குன்றிலிருந்து எடுத்து டிராக்டா், லாரி மூலம் எடுத்துச் செல்கின்றனா். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலங்களில் சிறிய குன்றின் மீது மழைநீா் உள்வாங்குவதால், அருகிலுள்ள திறந்தவெளி விவசாயக் கிணறுகளில் நீா்மட்டம் உயரும். இந்தக் குன்று அழிக்கப்பட்டு தற்போது நிலமாக மாற்றப்பட்டு வருவதால், மழைநீரை உள்வாங்காத நிலை ஏற்படுகிறது. இதனால், கிணறுகளில் நீா்மட்டம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

வீடியோஸ்


திருவண்ணாமலை