உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்.

58பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 8. 47 கோடி மதிப்பீட்டில் கொழப்பலூர் - விநாயகபுரம் சாலையில் செய்யாறு ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலத்தை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


அதைத் தொடர்ந்து காரில் அமர்ந்தபடி புதிய உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டார்.


பின்னர் போளூரில் பகுதியாக கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 4 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டின் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த திட்டப் பதாகியை திறந்து வைத்து அமைச்சர் பேசினார்.

பின்னர் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் நல திட்ட உதவிகளை அமைச்சர் எ. வ. வேலு வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி