கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு

வாக்கு சாவடிகள் மறு சீரமைப்பு குறித்த ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப. , தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (16. 09. 2024) வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு 2024 முன்மொழிவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 1500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்குதல், வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடம் மாறுதல், பெயர் மாறுதல் போன்ற முன்மொழிவுகள் அனுப்புதல் உள்ளிட்டவை குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
குடிக்க தண்ணீர் இல்லை; காலிக் குடங்களுடன் சாலை மறியல்
Sep 17, 2024, 02:09 IST/வந்தவாசி
வந்தவாசி

குடிக்க தண்ணீர் இல்லை; காலிக் குடங்களுடன் சாலை மறியல்

Sep 17, 2024, 02:09 IST
வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்டது மும்முனி ஊராட்சி. இந்த ஊராட்சிப் பகுதியில் கடந்த 20 நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: குடிநீா் இல்லாததால் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீா் சரிவர வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா். தகவலறிந்து அங்கு வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியலால் வந்தவாசி-ஆரணி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.