செய்யாறு: பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு

61பார்த்தது
செய்யாறு: பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தவர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் (வயது 61). விவசாயியான இவா், கடந்த 8-ஆம் தேதி தனது விவசாய நிலத்தில் பயிா்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்ததாகத் தெரிகிறது.

பின்னா், வீட்டுக்கு வந்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று ஜெயராமன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தொடர்புடைய செய்தி