ஆண்களை விட பெண்களையே முதுகுவலி பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. உடலில் கால்சியம் அளவு குறைந்து எலும்புகள் பலவீனமாவதால் முதுகெலும்பு பிரச்சனை ஏற்படுகிறது. கால் இடறி கீழே விழுதல், சாலை விபத்து, அதிக பளு தூக்குவது போன்ற காரணங்களாலும், சில குழந்தைகளுக்கு பிறப்பிலிருந்தேவும் முதுகெலும்பு பிரச்சனை ஏற்படலாம். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், போதைப்பழக்கம் போன்றவையும் முதுகு வலி பிரச்சனைக்கு முக்கிய காரணங்கள்.