திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய சுற்றுலா கழகம் சார்பாக 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற சுதந்திர நடை (குசநந றுயடம) பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து, பேரணியில் கலந்துகொண்டார். இந்த பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள அருங்காட்சியகம் வரை நடைபெற்றது.