கீழ்பென்னாத்தூர் - Kilpennathur

திருவண்ணாமலை: குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவண்ணாமலை: குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக ஜவ்வாதுமலை மற்றும் மலை அடிவாரப் பகுதியில் பெய்த மழையால் குப்பனத்தம் அணைக்கு தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையின் முழுக்கொள்ளவான 59 அடியில் தற்போது தண்ணீா் 57 அடியை எட்டியுள்ளது. இரவு நேரத்தில் மீண்டு மழை பெய்தால் குப்பனத்தம் அணை நிரம்பிவழியும் நிலை உள்ளது. இதனால் பொதுப்பணித் துறை மூலம் செங்கம் பகுதி செய்யாற்றின் கரையோர கிராம மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. செய்யாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும், ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்துவிட்டுள்ளனா். மேலும், மழை அதிகரித்தால் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீா் திறக்கப்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை