90 கி.மீ வேகத்தில் மோதிய ரயில்

69பார்த்தது
90 கி.மீ வேகத்தில் மோதிய ரயில்
109 கி.மீ. வேகத்தில் செல்லும் பாக்மதி அதிவிரைவு ரயில், 90 கி.மீ. வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. பொன்னேரி - கும்மிடிப்பூண்டி இடையே உள்ள கவரைப்பேட்டையில், நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி அதிவிரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து, ரயில்வே ஏடிஜிபி தலைமையிலான போலீசார், தேசிய பேரிடர் மீட்புக் குழு, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி