அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் கூட்டம்
திருவண்ணாமலை அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் மூன்றாம் காலாண்டுக்கான பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாகவோ அல்லது 26. 09. 24 -க்குள் அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு தபால் மூலமாக அனுப்பினால் கூட்டத்திற்கு முன்பு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.