மருத்துவர்கள் புற நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டம்

54பார்த்தது
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் 9 மணி முதல் 10. 00 மணி வரை நேற்று புறக்கணித்தனர். புற நோயாளிகள் பிரிவிற்கு முன்பாக வந்த 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிட கதவினை இழுத்துப்பூட்டி அதற்கு முன்பாக அமர்ந்து கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பியதோடு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி கோஷம் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவினை மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் ஒரு மணி நேரம் புறக்கணித்ததால் காலையிலேயே காய்ச்சல் , தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து பெறுவதற்காக வந்திருந்த பொதுமக்கள் மருத்துவமனை அறைகளிலும், வளாகத்திலும் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி