திருவண்ணாமலை இந்தியன் வங்கி சார்பில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கறவை மாடு கடன் வழங்கும் விழா இன்று (செப்.21) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி, திமுக மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.