செங்கம் - Chengam

காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி வசந்தகுமாா்(43). இவா், அக். 23-ஆம் தேதி செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்துக்கு வந்து இரவு மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். ஆற்காடு - காஞ்சிபுரம் சாலையில் வடஇலுப்பை கிராமம் அருகே சென்றபோது பைக் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வசந்தகுமாா் பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீடியோஸ்


திருவண்ணாமலை
Oct 31, 2024, 16:10 IST/ஆரணி
ஆரணி

ஆரணி: பட்டாசு கடையில் அலைமோதிய மக்கள்

Oct 31, 2024, 16:10 IST
இந்தியா முழுவதும் கொண்டாப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை ஆகும். பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகைக்கு உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம் ஆகும். இதையடுத்து, பொதுமக்கள் காலையிலே உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறுவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பட்டாசு வெடித்து வந்தனர். இன்று தீபாவளி பண்டிகை என்பதால் காலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் ஒரு கிலோ பட்டாசு 399 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் பட்டாசு கடையில் மக்கள் முந்திக்கொண்டு குவிந்தனர். கூட்டம் அலைமோதியதோடு, தள்ளுமுள்ளும் ஏற்பட்டதால் போலீசார் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.