விசிக ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம்

57பார்த்தது
செங்கத்தில் விசிக ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் ஒருங்கிணைந்த ஒன்றியத்தின் சார்பில் தெற்கு ஒன்றிய செயலாளர் சசிகுணா வடக்கு ஒன்றிய செயலாளர் சஞ்சய் தலைமையில் நடைபெற்றது

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ச. நியூட்டன் கலந்துகொண்டு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள்
ஆகத்து 17 அன்று கிராமம் தோறும் அன்னதானம் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி பொதுமக்களுக்கு பொருட்கள் நல திட்ட உதவிகளை
வழங்ககுமாரும் வருகின்ற அக்டோபர் 2- ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகின்ற மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு திரளாக மகளிர் களை அழைத்து வர வேண்டுமென சிறப்புரை ஆற்றினார்

இந்த நிகழ்வில் ஒன்றிய பொருளாளர்
சம்பத்வளவன் ஒன்றிய துணைச் செயலாளர் ஆலடியான்முன்னாள் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஒன்றிய நிர்வாகிகள் சுபாஷ், ராம்குமார் முஹம்மது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி