மடத்துக்குளம் - Madathukulam

மடத்துக்குளம்: ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை பதிவு முகாம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அமராவதி நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் சார்பில் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை மாணவர்களுக்கு பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.  ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் கற்பகவள்ளி, அமராவதி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன், கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் துறைத்தலைவர் எல். சங்கரமகேஸ்வரி, முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு. இக்பால் மற்றும் அமராவதி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டையை வழங்கி சிறப்பித்தனர்.  கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் பள்ளி மாணவ மாணவியருக்கு 14 இலக்கம் கொண்ட சுகாதார அட்டையினை கணினி மூலம் இணையதளம் வழியாக பதிவேற்றம் செய்து கொடுத்தனர். முகாமின் மூலம் சுமார் 64 மாணவ மாணவியருக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு அட்டைகள் வழங்கப்பட்டன.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా