
மடத்துக்குளம்: ஓடையில் குப்பைகள் தேக்கம்; விவசாயிகள் வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே செல்லப்பம்பாளையம் கிராமத்தில் இருந்து பெரிய ஓடை செல்கின்றது. கொடுக்கம் பாளையத்தில் துவங்கும் இந்த ஓடை சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் பயணித்து செல்லப்பம்பாளையம் வழியாக அர்த்தநாராயபாளையம் ஆற்றில் கலக்கிறது. மலைக்காலங்களில் இந்த ஓடையில் அதிக அளவு தண்ணீர் ஓடும் நிலையில் தற்போது ஓடையில் கிராம மக்கள் குப்பைகளை அதிகளவு கொட்டி வருகின்றனர். இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி புதர்களை வெட்டி அப்புறப்படுத்தி ஓடையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.