அரசு மருத்துவமனையில் அனுமதி சீட்டு வழங்கும் எந்திரம் பழுது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் அனுமதி சீட்டு வழங்குவதற்காக இரண்டு எந்திரங்கள் ஆஸ்பத்திரியில் நுழைவுவாயில் நிறுவப்பட்டுள்ளது. அதில் ஒரு இயந்திரம் பலநாட்கள் காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் சிகிச்சைக்காக வருகை தருகின்ற பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இவற்றை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.