திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை ரோட்டில் திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது தேவனூர் புதூர் ஊராட்சி மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. பொள்ளாச்சி உடுமலையிலிருந்து 20க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சந்திப்பு பகுதியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
மேலும் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது நிழற்கூரை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு அமர வேண்டி இருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.