திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி திருமூர்த்தி அணை காண்டூர் கால்வாய் அருகில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது ஆனால் அது பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விளையாட்டு உபகரணங்கள் வீணாகி வருகின்றன மேலும் பல இடங்களில் புதர் மண்டி காணப்படுவதால் பொதுப்பணித்துறையினர் பராமரித்து பயன்பாட்டுக் கொண்டு வர சுற்றுலா பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது