திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சங்கராமநல்லூர் பேரூராட்சி குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கன்னிஸ்ருதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கொழுமம் தாமோதரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மாரியப்பன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பேரூராட்சித் தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத்தலைவர் பிரேமலதா உத்தமராஜ், பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், முன்னாள் தலைமை ஆசிரியர் சரவணன், இந்துமதி ஆசிரியர்கள் மலர், முருகன், சிவஞானம், வினோத், ஆசாத், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ஆண்டுவிழாவில் விளையாட்டுப் போட்டி, நாட்டியப் போட்டி, கழகப் போட்டி மற்றும் மேஜிக் போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.