
திருச்சி மதுபழக்கத்திற்கு அடிமையான நபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர் குடும்பத்தாரிடம் அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று (மார்ச்.27) மது அருந்திவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் இருந்தவர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய மனைவி வித்யா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.