முசிறி தொட்டியத்தில் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மை எரிப்பு

85பார்த்தது
திருச்சி மாவட்டம்,
முசிறி , தொட்டியம்,
பகுதிகளில் திமுகவினர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள் என பேசியதை கண்டித்து உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த தமிழ்நாட்டு எம். பிக்களை நாகரிகமற்றவர்கள் என பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து முசிறியில் திமுக நகர செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், தொட்டியத்தில் திமுக நகர செயலாளர்
விஜய் ஆனந்த் தலைமையிலும் திமுகவினர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி