தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டை அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திமுக மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாரும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்கள் எல்லோரும் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாணவ, மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். அதற்கு காரணம் பல எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் என்று பேசினார்.