முசிறி என். ஆர். சிவபதி மருத்துவமனையில் எண்டாஸ்கோபி மூலம் ஒரு வயது குழந்தையின் வயிற்றில் இருந்த காதணியின் ஒருபகுதியை எடுத்து டாக்டர் சாதனை
கரூர் மாவட்டம், மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை நித்திஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக காதணியின் ஒரு பகுதியை விழுங்கியுள்ளது. பின்பு எந்த செயல்பாடும் இன்றி அழுது கொண்டிருந்த குழந்தையை திருச்சி மாவட்டம், முசிறி என். ஆர். சிவபதி சந்தா பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் குழந்தையை பரிசோதித்த டாக்டர். சுகுமார் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் காதணியின் ஒரு பகுதியை குழந்தை விழுங்கியதில் உணவுக் குழாய் பாதையில் சிக்கி உள்ளது தெரியவந்தது. இதனால் குழந்தை மிகவும் சிரமப்பட்டு இருந்ததை கண்ட டாக்டர் குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அதிநவீன உள்நோக்கு கருவி மூலம் உணவு குழாய் பாதையில் சிக்கி இருந்த காதணியின் ஒரு பகுதியை மருத்துவ குழு மூலம் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர். பின்னர் குழந்தையின் பெற்றோர் மருத்துவ குழுவிற்கு நன்றி கூறினர்.