தொட்டியம் மதுரகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா வீடியோ

75பார்த்தது
முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா - திரளான பக்தர்கள் பூத்தட்டுகளுடன் பங்கேற்பு


திருச்சி மாவட்டம், முசிறி அருகே
தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு வணிகர்கள் சங்கத்தின் சார்பில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூத்தட்டுகள் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் பூத்தட்டு ஊர்வலம் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலை வந்தடைந்தது. அப்போது சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மதுரை காளியம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பூக்களை அர்ச்சனை செய்து பூச்சொரிதல் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலத்தில் செட்டிங் அலங்காரத்தில் மதுரை காளியம்மனும், சங்கு சக்கரத்துடன் கிருஷ்ண பரமாத்மா உருவச் சிலையும் சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பூத்தட்டு ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாது தடுக்கும் விதமாக முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் தொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி