முசிறியில் உலக மகளிர் தின விழா விழிப்புணர்வு பேரணி

64பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறியில் காவல்துறை பள்ளி கல்லூரி மாணவிகள் இணைந்து மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 

முசிறி கைகாட்டியில் துவங்கிய பேரணியை முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வாணி மற்றும் முசிறி காவல் ஆய்வாளர் செல்லத்துரை முன்னிலையில் துவக்கி வைத்தார். முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி சென்றது. 

பேரணியில் முசிறி காவல்துறையினர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, எம்.ஐ.டி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் முசிறி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். பேரணியில் மகளிர் உரிமை குறித்த பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் சென்றனர்.

தொடர்புடைய செய்தி