முசிறி அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் போக்சோவில் கைது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு 17 வயது சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்ற சம்பவங்கள் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.