திருச்சி மாவட்டம் முசிறியில் போக்குவரத்து போலீசார் காற்று ஒலிப்பானை
வாகனங்களில் இருந்து அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் போக்குவரத்து வாகனங்களில் அதிக ஒளி எழுப்பும் காற்று ஒழிப்பான்களினால் பெரும் இடையூறு ஏற்பாடுவதாக பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் முசிறி மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) அருண்குமார், முசிறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சின்னையன், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தி பைக், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் எனப்படும் காற்று ஒலிப்பானை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.