முசிறியில் விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. வீடியோ

85பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் ஏரிகள் மற்றும் அய்யாறு பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்கம் இணைந்து காவிரி ஆற்றையும் அய்யாற்றையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க தலைவர்கள் யோகநாதன், அய்யாகண்ணு உள்ளிட்ட பலர் காவிரி ஆற்றில் இருந்து வரும் உபரி நீரை அய்யாற்றில் பம்பிங் செய்து பாசன வசதியை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

இதன் மூலம் விவசாயிகள், பொதுமக்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள் என்பதையும் விளக்கி பேசினர். அதனைத் தொடர்ந்து நேரடியாக சென்ற விவசாயிகள் விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். பின்னர் முசிறி கோட்டாட்சியர் ஆர்முகதேவசேனாவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். முசிறியில் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி