முசிறி அருகே 40 கிலோ ஹான்ஸ் பறிமுதல்.. ஒருவர் கைது

76பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி காவல் ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பெரியார் பாலம் பகுதியில் தனது குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பைக்கில் மூட்டைகளுடன் வந்தவரை நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்கு பின்னாக பேசினார். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் பெட்டவாய்த்தலை தேவஸ்தானம் பகுதி கொடிக்கால் தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 39) என தெரிந்தது. மேலும் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 40 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் கட்டி வியாபாரத்திற்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து வாகனம் மற்றும் ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி