திருச்சி மாவட்டம், முசிறியில் 15- வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் அலுவலகத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முசிறி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வனஜா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அப்போது என் வாக்கு என் உரிமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது உட்பட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை பேரணியாக சென்றனர். அதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் முசிறி வட்டாட்சியர் லோகநாதன் தலைமையில் மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வருவாய் துறை அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.