முசிறியில் பாரதிய ஜனதா கட்சியினர் வீட்டு காவலிலும், போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து பாஜக நகர தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் முசிறி முருகன் கோயிலில் சுவாமி வழிபாடு முடித்து காவடி வேல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று இன்று கோயிலில் புனிதம் காக்கவும், உரிமையை மீட்கவும் சபதம் எடுத்து கொள்வதாக முடிவு எடுத்திருந்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக முசிறி பாஜக நகர தலைவர் தமிழ்செல்வன் நள்ளிரவு முதல் வீட்டுக்காவலிலும், முசிறி கைகாட்டியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பத்துக்கு மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் முசிறி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.