நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிக்க இன்று (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, விசிக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மநீம, தவெக, மதிமுக, கொமதேக, ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கவுள்ளன. பாஜக, நாதக, தமாக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற உள்ளதாக தெரிகிறது.