தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் நடத்துநருக்கு பதில் இனி நடத்துநர் மற்றும் ஓட்டுநர் என பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு நடத்துனர் பணிக்கு பதிலாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுநர், நடத்துனர் இருவருமே இரண்டு பணிகளையும் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.