முசிறி அருகே கரிகாலி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம், முசிறி அருகே கரிகாலி கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் விவசாயிகள் சம்பா, குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்துள்ளது.
இந்நிலையில் கரிகாலி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிதாக நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்துள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நெல்லை விற்று வருகின்றனர். இந்நிலையில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் சென்று கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடு பற்றி கேட்டறிந்தார். அப்போது
திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.