திருச்சி மாவட்டம் முசிறி சந்திரமெளலீஸ்வரர் சிவாலயம் மற்றும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் சிவாலயத்திலிருந்து சுவாமிகள் தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவிற்கு புறப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலையில் வருடம் தோறும் காவிரி ஆற்றில் தைப்பூச தினத்தன்று எட்டு ஊர்களைச் சேர்ந்த சுவாமிகள் ஒன்று கூடும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
இரவு முழுவதும் வழிபாடு முடிந்து சுவாமிகள் மீண்டும் அந்தந்த ஊருக்குச் செல்வது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. நிகழாண்டு முசிறி சந்திரமெளலீஸ்வரர் கற்பூரவள்ளி முசிறி அருகே உள்ள வெள்ளூர் திருக்காமேஸ்வரர் சிவகாமசுந்தரி ஆகிய சுவாமிகள் ரிஷப வாகனத்தில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளினர். மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக திரளான பக்தர்களுடன் வீதி உலா வந்து குளித்தலை தைப்பூச தீர்த்தவாரி திருவிழாவிற்குப் புறப்பட்டனர்.
முசிறியின் சுழலும் குதிரை வாகனம் பக்தர்களின் அபிமானத்தைப் பெற்றது. சுவாமி திருவீதி உலாவின் போது திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.