முசிறி சந்திரமவுலீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

50பார்த்தது
முசிறியில் சந்திரமவுலீஸ்வரர் சிவாலயத்தில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், முசிறியில் மிகவும் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி பூஜை, நவகிரகஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை, யாக வேள்வி, வேத பாராயணம், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை மகாபூர்ணாகுதி தீபராதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் சந்திரமவுலீஸ்வரர், தாயார் கற்பூரவல்லி ஆகியோருக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், நாகராஜ சிவாச்சாரியார், ரத்தினசல சிவாச்சாரியார், ஆகியோர் தலைமையிலான வேத பண்டிதர்கள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி