முசிறி ராணுவ வீரர் உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்

79பார்த்தது
முசிறியில் எல்லை பாதுகாப்பு படையில் பணியின் போது உயிரிழந்த அதிகாரிக்கு ராணுவ மரியாதை - 5 குண்டுகள் முழங்க நல்லடக்கம். கரூர் மாவட்டம் குளித்தலையில் வசித்து வந்த நாராயணன் என்பவர் மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதால் பணியின் போது உயிரிழந்தார். 

இதை அடுத்து எல்லை பாதுகாப்பு படை உதவி கமாண்டர் சைலேந்திர குமார் பாண்டே தலைமையில் 12 பேர் அடங்கிய ராணுவ வீரர்கள் நாராயணன் உடலை குளித்தலை கொண்டு வந்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உறவினர்களின் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் முசிறி காவிரி ஆற்றுக் கரையில் அமைந்துள்ள இடுகாட்டுக்கு நாராயணன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் 5 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். 

அவர் மீது பொருத்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவ வீரர் நாராயணன் உடல் கிறிஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. நாராயணன் 38 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியில் இருக்கும்போதே மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி