தமிழ் சினிமா கண்ட சிறந்த குணச்சித்திர, வில்லன் நடிகர்களில் முதன்மையானவராக திகழும் நாசர் இன்று (மார்ச். 05) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞனாக திகழும் நாசர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லலாம். கூத்து, நவீன நாடகம், திரைப்பட நடிப்பு என்ற மூன்றின் மீதான நாசரின் புரிதல், பயிற்சி அபாரமானது.