கிறிஸ்தவர்களின் தவக் காலமான சாம்பல் புதன் இன்று (மார்ச் 05) தொடங்கியது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், நாகை, வேளாங்கண்ணி, சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு உள்ள 40 நாட்கள் தவக் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.