முசிறி, தொட்டியம் காவிரி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்பணம் செய்து வழிபாடு.
திருச்சி மாவட்டம் முசிறி , தொட்டியம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மஹால்யா அமாவாசை ஆகிய தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று தை அம்மாவாசை என்பதால் காவிரி ஆற்றில் அதிகாலை முதலே பக்தர்கள் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் முன்னிலையில் இறந்து போன தங்கள் முன்னோர்களுக்கு படையல் இட்டு தேங்காய், பழம், மளிகை சாமான்,
ஆகியவற்றை வைத்து எள்ளுடன் தண்ணீர் வார்த்து திதி கொடுத்து, பிண்டம் வைத்து , தர்ப்பணம் கொடுத்தனர். தை அமாவாசையை முன்னிட்டு முசிறி மகா மாரியம்மன் அங்காளம்மன் சின்ன சமயபுரத்தால் பாலத்து மாரியம்மன் சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் தொட்டியம் அனலாட்டிஸ்வரர் மதுரை காளியம்மன் கோயில் தா. பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயம் பெரிய மாரியம்மன் செங்குந்தர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், உடைப்பு வாய் கருப்பண்ண சுவாமி கோயில் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது பக்தர்கள் நெய் விளக்கிட்டு தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.