முசிறியில் புகையிலை பறிமுதல் வழக்கில் மேலும் 5 பேர் கைது

50பார்த்தது
முசிறி அருகே வெளிமாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 460 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது.திருச்சி மாவட்டம் முசிறியில் நேற்று முன்தினம் சொகுசு காரில் 460 கிலோ புகையிலைப் பொருட்களை கடத்திய கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரஜ்வால் உமேச் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 460 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை செய்ததில் இந்த குட்கா கடத்தலில் தொடர்புடைய மயில்வாகனன், தங்கமாயன், சன்னந்குமார், பாலாஜி, மணிராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி