துறையூர் நகராட்சியில் வாடகை தராத கடைகளுக்கு சீல் வைப்பு

83பார்த்தது
துறையூர் பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக வாடகை தராததால் முறையாக அவர்களுக்கு அறிவிப்பு விடுத்தும் வாடகை வசூலாகவில்லை. இதனால் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய துறையூர் நகராட்சி அலுவலர்கள் துறையூரில் பேருந்து நிலையத்தில் உள்ள நான்கு கடைகளுக்கு வாடகை தராததால் சீல் வைத்தனர். மேலும் காய்கறி மார்க்கெட் பகுதியில் 10 கடைகள் வாடகை தராத காரணத்திற்காக சீல் வைக்கப்பட்டது. இதனால் துறையூர் பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி