திருச்சி: தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

72பார்த்தது
திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தரைக்கடை வியாபாரிகளுக்கென தனியிடம் ஒதுக்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மேலச் சிந்தாமணி, பழைய கரூா் சாலை, அண்ணா சிலை ஆகிய பகுதிகளில் கடந்த 20 ஆண்டு காலமாக தரைக்கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகளை கடைகளுடன் அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளா் செல்வி சில தினங்களுக்கு முன்பு நிகழ்விடம் சென்று நிலைமை குறித்த விவரம் கேட்டுள்ளாா்.

அப்போது, அங்கு ஏராளமானோா் சூழ்ந்து கடைகள் அமைக்க எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதனால் வியாபாரிகள் மற்றும் அப்பகுதியினா் என இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலா் செல்வியை தரக்குறைவாகப் பேசி தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்தும், போலீஸாா் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சிஐடியு தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி