திருச்சி: இன்று தொடங்கியது சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதத்தை

69பார்த்தது
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாய சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும் தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பாகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பார். 

இந்த 28 நாட்களும் திருக்கோயில் உள்ள அம்மனுக்கு தளிகை நெய் வைத்தியம் கிடையாது, துள்ளு மாவு, நீர்மோர், பானக்கம் மற்றும் இளநீர் செய்யப்படுகிறது. முதல் வாரப் பூச்சொரிதல் விழாவான இன்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணையான பிரகாஷ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் யானையின் மீது பூத்தட்டுகளை வைத்தும் கையில் ஏந்தியும் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று முதல் பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் விழாக் கோலம் கொண்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி