திருச்சி: மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் விவசாயிகள் மனு

79பார்த்தது
திருச்சி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்வெளியில், தொடர்ந்து ஊடுபயிராக உளுந்து சாகுபடி செய்யப்பட்ட நிலையில், வேளாண் துறையால் வழங்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட ரகமான வம்பன் 8 மற்றும் வம்பன் 10 ரக பயிர்கள் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளதாகவும், புதுக்கோட்டை சார்ந்த ரகத்தை திருச்சி மாவட்டத்திற்கு வேளாண் துறை வழங்கியதால் திருச்சி மாவட்ட மண்ணிற்கு உகந்ததாக இல்லாமல் உளுந்து விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், எனவே வேளாண் துறையும், மாவட்ட நிர்வாகமும் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்த வயலூர் ராஜேந்திரன் மற்றும் அயிலை சிவசூரியன் உள்ளிட்ட விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களை கையில் ஏந்திய படி மனு அளித்தனர். வேளாண் துறை இனிவரும் காலங்களில் இவ்வகை விதைகளை வழங்கக்கூடாது என்றும், தற்போதைய பாதிப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி