திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் காந்தி மார்க்கெட் பகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் பெரிய கம்மாள தெரு அருகே 20 வது வட்டக் கழக செயலாளர் தியாகராஜன் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் அறிவொளி ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கழக செயலாளர் TAS. கலீல் ரஹ்மான் , காந்தி மார்க்கெட் பகுதி பொறுப்பாளர் பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்