திருச்சி ரயில்வே ஜங்ஷனில் 2 கிலோ உலர் கஞ்சா பறிமுதல்

80பார்த்தது
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை அங்கத்தினர் திருச்சி ஜங்ஷன் நடைமேடைகளில் சட்டவிரோதமான போதைப் பொருட்கள் கடத்தலுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து வந்த ரயிலில் பயணித்த 35 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆண் ஒருவரை சோதனை செய்த போது 2 கிலோ உலர் கஞ்சாவைக் கொண்ட ஒரு காக்கி நிற மூட்டை இருப்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணையில், அவர் ஒடிசாவைச் சேர்ந்த அக்ஷய் மாஜி என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் மொபைல் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி