நீலகிரி மாவட்டத்திற்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்று வரவேண்டிய வழிமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. நீலகிரி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வாரநாட்களில் 6,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களை மட்டும் அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.