முசிறி அருகே தா. பேட்டை: ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம்.

74பார்த்தது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா. பேட்டையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 72 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை கழக பேச்சாளர் கரூர் முரளி சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம். எல். ஏ பேசுகைகையில் தமிழக முதல்வர் பெண்களுக்கு பல்வேறு சலுகை திட்டங்கள் அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அதனைப் பார்த்து டெல்லியில் பெண்களுக்கு 2500 ரூபாய் தருவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்துள்ளனர். இந்தியாவிற்கு திமுக திராவிட மாடல் ஆட்சி முன் மாதிரி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி