மத்திய தொழிற்சங்கங்கள் மே மாதம் நடத்தவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் குறித்த ஆயத்த மண்டல மாநாடு திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற இந்த மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், காா்ப்பரேட் ஆதரவு தொழிலாளா் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை தடுத்து நிறுத்துவது, தனியாா் மயத்தை தடுப்பது, தொழிலாளா்கள் - விவசாயிகளை ஓரணியில் திரட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், அனைத்துத் தரப்பினரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது, போராட்டத்தை வெற்றி பெறச்செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.